Skip to main content

பெருமதிப்பிற்குரிய எமது ஆசானுக்கு! - ம. முருகாம்பிகை

கலியுகத்தில் கடவுளைக் கண்ணால் காணமுடியாது என்பது ஆன்றோர் வாக்கு. கலியுகம் எமக்குத் தந்த கடவுள் எமது சிவச்சந்திர தேவன் ஐயா அவர்கள். நிரந்தர நியமனத்தை நாம் பெறுவதற்கு நித்தமும் அயராது உழைத்த உத்தமர் எங்கள் ஆசான். சுயமாய், சுகமாய் நாம் வாழ வழிவகுத்தவர் எமது ஆசான். அவர் செய்த புண்ணியங்களின் பயனாக அவருக்கு இந்திரப்பதவி கிடைத்துவிடும். இருப்பினும் அந்த நல்ல ஆத்மா இறைவனுள் இரண்டறக்கலக்க  இறைவனை வேண்டுகிறோம். தந்தையாய் இருந்து அவர்தம் வம்சம் தழைக்க நினைத்த அனைத்து சௌபாக்கியங்களையும் அவரின் வம்சம் பெற வேண்டுகிறேன்.

திருமதி . முருகாம்பிகை


Comments