வழமையாக நண்பர்களின் பெற்றோர்களுடன் நட்புப் பாராட்டுவதும் அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதும் எனக்கு மிக அரிதான ஒரு நிகழ்வாக இருக்க, நீங்கள் என் சிறுவயது முதல் அதற்கு விதி விலக்காக இருந்தீர்கள். என் நண்பனைப் பார்க்கவரும் போதெல்லாம் நீங்களும் ஒரு நண்பனாக எங்களுடன் இருந்து கதை கேட்பது, உங்களுடைய கதைகளைப் பகிர்வது என்று சிரித்த முகத்துடன் இருப்பீர்கள். உங்கள் கையால் பருகிய தேநீர், நீங்கள் என்னைப்பற்றி நலம் விசாரிக்கக் கேட்கும் கேள்விகள், சிலேடையாகப் பேசும் விஷயங்கள், கள்ளம் கபடமற்ற அந்தச் சிரிப்பு, தமிழின் மீது நீங்கள் வைத்திருந்த ஆர்வம், சுருக்கெழுத்து மீது காட்டிய பற்று, வீதியில் நடமாட உங்களுக்குத் துணையாக வரும் அந்தப் பையுடனான கம்பீரமான தோற்றம், உங்கள் பிள்ளைகள்மேல் காட்டிய அளவில்லா அன்பு, அவர்கள் ஆசைப்பட்டதை அடைய அளித்த சுதந்திரம், பிள்ளைகளின் நண்பர்கள் மேல் காட்டிய பாசம் என உங்களிடம் நான் பார்த்து வியந்த பற்பல விஷயங்கள், கற்றுக்கொண்ட விஷயங்களை இனிக் காணமுடியாது என நினைக்கும்பொழுது மனம் பெரும் வேதனை அடைகின்றது.
நீங்கள்
கற்றுக்கொடுத்த விஷயங்கள், பழகியபோது ஏற்பட்ட அரிய தருணங்கள், உங்கள்
மேல் நாம் வைத்துள்ள மரியாதை, உங்களிடம்
காட்டிய அன்பு போன்றன இருக்கும் வரை நீங்கள் எம்முடன்
எங்களுக்குள் எப்பொழுதும் எம்மை விட்டு நீங்காது இருப்பீர்கள்!
அன்பிற்கினிய
அழகிய ஆன்மா சாந்தியடைய மனமார இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நரேந்திரன் கருணாகரன்
Comments
Post a Comment