என்ற
பொய்யாமொழிப் புலவரின் நல்வாக்குக்கு இணங்க, என்வாழ்வில் இறுதிக்கணம் வரை நல்ல நண்பனாய் வாய்த்தவன்
என் சிவச்சந்திர தேவன்.
தரம்
6 இல் எனக்கு அவர் அறிமுகமானவர். அன்றிலிருந்து
உயர் தரம் வரை அமையப்பெற்ற
பாடசாலை வாழ்க்கையைப் பசுமையான பொழுதுகளாக மாற்றியது அவனது நட்பே‚ அவனது வீட்டிற்குச் சென்று மகிழ்ந்திருந்த தருணங்கள் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.
எமது
வாழ்வின் முக்கிய முடிவுகளை நாம் எமக்குள் கலந்தாலோசித்தே எடுத்தோம். வாழ்வின் முக்கிய தருணங்களில் ஒருவருக்கொருவர் இணைந்தே இருந்தோம். தனது வாழ்வின் இன்ப
துன்பங்களைத் திறந்த மனதுடன் என் நண்பன் என்னுடன்
எப்போதும் பகிர்ந்து
கொள்வான். என் ஆலோசனைகளைக் கேட்பான்.
அதேசமயம் எனக்கு அறிவுரை சொல்வான்.
1978இல்
மக்கள் வங்கியில் இணைந்துகொண்ட என் நண்பன் மக்கள்
வங்கிக்கும் மக்களுக்கும் மகத்தான சேவையாற்றினான். 1985இல் வடமராட்சி சுருக்கெழுத்துக்
கழகத்தை ஆரம்பித்து அதனை அவன் செயற்படுத்திய
விதம் செயற்கரிய செயலைச் செய்யும் செயல்வீரனாய் அவனை மிளரச் செய்தது.
ஒருநாள்
நெல்லியடி மக்கள் வங்கியில் பணியாற்றும்பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட ஏனைய வங்கி உத்தியோகத்தர்கள்
அவனை என்னிடம் அழைத்து வந்தனர். உடனடியாக சில முதலுதவிகளைச்
செய்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று, அவனைக் காப்பாற்றினோம்.
அன்றிலிருந்து
எமது நட்பின் ஆழம் இன்னும் அதிகரித்தது.
எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிச் செய்யும் என் நண்பன் எமனோடு
போகும்போது ஏன் சொல்லாமல் போனானோ?
எனது வாழ்வின் பெரும் பகுதியை அவனது நட்பு ஆக்கிரமித்திருக்கின்றது. என் மனதிலிருந்து அவன்
நினைவுகளை என் நினைவுள்ளவரை அழிக்கமுடியாது.
உடலால் இவ்வுலகை அவன் பிரிந்தாலும் என்
உள்ளத்தில் என் நண்பன் என்றென்றும்
வாழ்ந்திருப்பான்.
நண்பாஇ
உன் ஆத்மா ஆண்டவன் சந்நிதியில் அமைதி கொள்ளட்டும்‚
Comments
Post a Comment