கொரோனாவின்
அமைதி கிழித்த அந்த செய்தி
எறிகணையாய்
எம் நெஞ்சில் எரிகனல் ஆனதுவே‚
மொரட்டுவை
அதிகாலை சிவசந்திரனை இழந்ததனால்
வீறிட்டு
விடிந்த வேளை வலுவிழந்து வாழ்விழந்ததுவே‚
ஞாயிறினில்
ஒரு சூரியனாய்...
திங்கள்தனில்
ஒரு சந்திரனாய்...
செவ்வாயில்
ஒரு அகங்காரனாய்...
புதனிலும்
ஒரு புண்ணியனாய்...
வியாழனில்
ஒரு வல்லவனாய்...
வெள்ளிதனில்
ஒரு வள்ளுவனாய்...
சனிதோறும்
ஒரு காவலனாய்...
வாரமொரு
வடிவம் கொண்டாய் ஐயா...
எங்கள்
சிவச்சந்திரதேவனே செம்மல்!
விளக்கமின்றி
இழந்தோம் உம்மை
விரித்துயர்
துடைக்க யாரிருக்கார் நம்மை
ஆத்மா
சாந்திக்காக வழிபடுகிறோம் இம்மை
இனியும்..
தமிழ் மிடுக்குடன் மீண்டும் ஒரு வாரம் பிறக்கும்
அதில்
தௌpவுடன் தேவ வடுவம் தருவாய்
என...
எதிர்பார்த்து
காத்திருக்கும்
‘சத்தியாவுடன்
வாசனா”
Eng - M. S. Sathiatheepan
பொறியியலாளர்,
மொறட்டுவை
பல்கலைக்கழகம்,
இலங்கை.
Comments
Post a Comment