Skip to main content

மதிப்பிற்குரிய சிவச்சந்திரதேவன் Sir - ஜெயசுதாகினி சிவாகரன்

மதிப்பிற்குரிய சிவச்சந்திரதேவன் ளுசை                                                          

சிவச்சந்திரதேவன் Sir அவர்களிடம் நேரடியாக அவருடைய கழகத்தில் நான் பயிற்சி பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடன் நட்பு ரீதியான நல்லதொரு பழக்கம் எனக்கு இருந்து வந்தது. Sir அவர்களிடம் அவரது சுருக்கெழுத்து, தட்டச்சு கழகத்தில் 1995- 1996 காலப்பகுதியில் பயிற்சி பெற்ற எனது நண்பிகள் மூலமாகவே எனக்கு Sir அவர்களை முதலில் தெரியவந்தது. அந்நாட்களில் Sir, கழகத்தின் மூலம் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்வது வழக்கம், அவ்வாறு ஒரு சுற்றுலாவிற்கு கழகத்தில் பயிலுனர்களாக இல்லாத நானும் இன்னும் சிலரும் கழகத்தில் பயிற்சி பெறும் எமது நட்பு வட்டங்களுடன் இணைந்து சென்றிருந்தோம். அச்சுற்றுலா சென்ற எம் அனைவரையும் Sir அவர்கள் பாகுபாடின்றி அழைத்துச் சென்றது மட்டுமன்றி, எம்முடன் மிகவும் இனிமையாகவும், நட்புடனும் பழகினார். அந்தச் சுற்றுலா மிகவும் இனிமையான பயணமாக எமக்கெல்லாம் அமைந்ததற்கு Sir அவர்களின் தோழமைத்தன்மையும் இனிய சுபாவமுமே காரணம். அச்சுற்றுலாவின் பின்னர் சிவச்சந்திரதேவன் Sir அவர்கள் என்னை நேரில் காணும் போதெல்லாம் மிகவும் இனிமையாக கதைப்பார், நலம் விசாரிப்பார். அதன் பின்னர் நான் 2001ஆம் ஆண்டில் அரச சேவையிலிணைந்த பின்னர் என்னுடன் பணியாற்றிய சக உத்தியோக நண்பிகள் Sir அவர்களிடம் பெற்றுக்கொண்ட தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகளின் மூலம் தமக்குக் கிடைத்த அனுகூலங்களைப் பற்றிக்கூறும் போது Sir அவர்கள் சிறந்ததோர் ஆசான் மற்றும் வழிகாட்டியென்பது எனக்குத் தெரிய வந்தது. பின்னர் Sir அவர்களின் மனைவியான கிருஷ்ணகுமாரி அக்கா அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டதும் ளுசை அவர்களுடனான நட்பு மேலும் தொடர்ந்தது. Sir அவர்களின் குடும்பம் கொழும்பிற்கு சென்ற பின்னர் Sir அவர்கள் தனது சொந்த அலுவலாக கரவெட்டிப் பிரதேச செயலகத்திற்கு வரும் போதெல்லாம் எம்மை மிகவும் அன்புடனும் அக்கறையுடன் நலம் விசாரிப்பார். இவ்வாறான Sir அவர்களுடனான இனிமையான நிகழ்வுகளை இச்சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மனத்திருப்தி கிடைக்கின்றது.

திரு.சிவச்சந்திரதேவன் ஆசான் அவர்களின் உன்னதமான ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்ப உறுப்பினர்களிற்கு அன்னாரது ஆசிகள் என்றென்றும் இருக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

திருமதி ஜெயசுதாகினி சிவாகரன்
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் I 
பிரதேச செயலகம்பருத்தித்துறை.

Comments