Skip to main content

அண்ணாவாகிய குருவே! - அருந்தவராணி கிருஷ்ணானந்தம்

தங்களுக்கு அன்புள்ள தங்கையின் கண்ணீர் மடல். எவரிடமும் சொல்லாமல் சென்றதேனோ தபாலில் மருந்து அனுப்பிவைக்குமாறு கேட்டிருந்தீர்கள். அனுப்பச் சுணங்கியதால் ஏற்பட்ட கோபமா? தங்களின் துயரச் செய்தி அறிந்ததும் கவலையுடன் குற்ற உணர்ச்சியே என்னை வெகுவாகப் பாதித்தது. தங்கள் மனைவிக்கும் பிள்ளை களுக்கும் சகல காரியங்களும் பார்த்துப் பார்த்து செய்வீர்களே அவற்றுக்கு யாரை நியமித்துச் சென்றீர்கள்? எப்படி ஆறுவார்கள்? தேற்ற வழியின்றி எல்லோரும் தவிக்கின்றோமே, இது நியாயமா? உங்கள் வீட்டாருக்கு மட்டுமன்றி அறிந்த, தெரிந்த யாவருக்கும் என்ன நன்மை செய்யலா மென்று எந்நேரமும் சிந்தித்து செயற்படு வீர்களே! இந்த மனம் யாருக்கு வரும் நீங்கள் வந்த காரியங்கள் முடிந்துவிட்டதென்று கடவுள் அழைத்துவிட்டாரா? எப்போது நினைத்தாலும் தங்களின் உருவம் வெள்ளைநிற உடுப்புடன் இப்போது இருந்த வீட்டினுள்ளே நிற்பதாகத் தோன்றுகின்றது. நீங்கள் இவர்களை விட்டுச் செல்லாது எப்போதும் அவர்களுக்குக் காவலாக நிற்பீர்கள் போல் தோன்றுகின்றது. இது நிஜம்.

இன்றுபோல் இருக்கின்றது தங்களிடம் 1983ஆம் ஆண்டில் இலவச தமிழ் சுருக்கெழுத்துப் பயின்றது. அன்று முதல் குருவாக ஏற்றுசேர்என அழைத்துவந்தேன். 1984ஆம் ஆண்டு தொடக்கம் சித்தமருத்துவம் படிக்கத் தொடங்கியதால் தங்களின் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்திற்கு எந்தவொரு பங்களிப்பையும் வழங்க முடியவில்லை. கழக நிகழ்வுகளிலும் படிப்பு, தொழில், வெளியு+ர் வாசம் போன்ற காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. இன்று நினைத்தால் கவலையாக உள்ளது. இனி சந்தர்ப்பம் கிடைத்தால் என்னாலானதைச் செய்வேன் எனக் கூறிக்கொள்கின்றேன்.

சுருக்கெழுத்து, தட்டெழுத்துக் கல்வி தொடர்பாக அநேகமான வர்கள் போல் தொழில் பார்க்காவிட்டாலும் படிக்கும் காலத்தில் குறிப்பெடுக்கவும் பட்டமேற்படிப்பு ஆய்வுக்கட்டுரை உருவாக்கவும் அது மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. ஆய்வு மேற்பார்வை யாளர் கொழும்பில் வசித்ததால் நான் தங்குவதற்கும் ஆய்வுக்கட்டுரை நிறைவேற்றவும் தங்கள் குடும்பத்தினர் அனைவருமே உதவி புரிந்தார்கள். தாங்கள் சொய்சாபுர வீட்டில் வசித்த காலத்தில் நான் கொழும்பு வந்த போது புகையிரதநிலையத்திற்கு வந்து என்னைக் கூட்டிச் சென்றீர்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்களின் திருமண நாளின்பின் சகலியாகிய நான் தொடர்ந்துசேர்என அழைத்துவந்தேன். ஒருநாள் என்னிடம்சேரஎனக் கூப்பிட வேண்டாம். “அண்ணாஎன அழைக்குமாறு கூறினீர்கள். அதன்படி மரியாதையுடன்அண்ணைஎன அழைத்துவந்தேன். தாங்கள் புகுந்த வீட்டினுள் குறைபாடுகளை ஒவ்வொன்றாக நீக்கி யுள்ளீர்கள். என் அறிவிற்கு அங்குள்ள குறைபாடுகள் புலப்பட வில்லை. இதனால் நான் எதுவுமே செய்யவில்லை. நீங்கள் அதுமட்டுமா செய்தீர்கள்.

ஊரிலுள்ளவர்கள் கைவிசேடம் பெறவேண்டுமென்று எண்ணி சித்திரை வருடப்பிறப்பன்று பல வருடமாக கோயில் குருக்கள் மூலம் கைவிசேடம் வழங்கி வந்தீர்கள். இவ்வருடமும் ஊரடங்கு அமுலில் இருந்தபோதும் கைவிசேடம் வாங்குவதற்காக பலர் கோயிலுக்குவந்து வாங்கிச்சென்றதை அவதானிக்க முடிந்தது. எப்படி ஊரார் மறப்பார்கள்?

எப்போது யாரைக் கண்டாலும் அன்புடன் உரையாடி, விசாரித்து, அறிவுரை வழங்குவீர்கள். தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் யாவருக்கும் தங்கள் ஆசீர்வாதம் கிடைக்கவும் தங்கள் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சு கின்றேன்.

வணக்கம்

இப்படிக்கு,
தங்கையாகிய மாணவி,
அருந்தவராணி கிருஷ்ணானந்தம்
ஆயுள்வேத மருத்துவ உத்தியாகத்தர்,
அரசினர் சித்த மருத்துவ ஆயுள்வேத வைத்தியசாலை,
கைதடி.


Comments