புலமையாளர்கள் நிறைந்த நகரம் புலோலி என அழைக்கப்படுகின்றது. “பச்சிமப் புலவர் கானம் நகரம்” என முருகப்பெருமானால் அடையாளம் காணப்பட்டதான தென் புலோலி உபயகதிர்காமம் வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது. தான்தோன்றீஸ்வரராக புற்றுக்குள் தோன்றிய சித்திவிநாயகர் கோயில் கொண்டிருக்கின்ற புற்றளையென்னும் சிற்றூரில் கு.க. வயிரவிப்பிள்ளை, அன்னம்மா ஆகியோருக்கு இரண்டாவது பிள்ளையாக பிறந்தவர் சிவச்சந்திரதேவன் ஆவார்.
ஒரு
நூற்றாண்டுக்கு முன்னர் எமது அயலில் ஒரு
சைவத் தமிழ் பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டுமென பெரியவர்கள் முயற்சி மேற்கொண்டு பொருத்தமான இடத்தைத் தேடி அலைந்தபோது சிவச்சந்திரதேவனின்
தந்தையார், தனது முன்னோர்களின் காணியை
நன்கொடையாக வழங்கி பாடசாலைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்கு உதவி புரிந்தார்கள். அப்பாடசாலை
அண்மையில் நூற்றாண்டுவிழா கொண்டாடியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரது
தந்தையான வயிரவிப்பிள்ளை தென்புலோலி தமிழ் காத்த கந்தமுருகேசனார் அவர்களிடம் தமிழ் படித்து பண்டிதர் பட்டம் பெற்றவர். இயற்கையாகவே தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தவர். மூதறிஞர் கந்தமுருகேசனாரின் கொள்கைகளில் அதிக ஆர்வம் உடையவர்.
இவரது பிள்ளைகளுக்கு வைத்தபெயர்களைப் பார்த்தே இவரது இலக்கியப் பற்றை அறிந்துகொள்ளமுடியும். கந்தமுருகேசனாரின் விருப்பத்திற்கு அமைவாக தான் பிறந்த கிராமத்தில்
“புலோலி தமிழ் இளைஞர் கழகம்” என்ற பொது அமைப்பை
தனது நண்பர்களுடன் இணைந்து 1944ஆம் ஆண்டு அமைத்து,
சமூக வளர்ச்சிக்கும் தமிழ்க் கலை வளர்ச்சிக்கும் வித்திட்டவராவார்.
அண்மையில் பவளவிழா கண்ட அமைப்பாக இக்கழகம்
இயங்குகின்றது.
இப்படியாக
சமூகப்பற்றும் சேவை மனப்பாங்குமுள்ள குடும்பத்தில்
பிறந்தபடியால் இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவுகின்ற தன்மை இவரிடம் அதிகம் இருக்கின்றது. தனது குடும்பத்தின் மீதும்
உறவினர்கள் மீதும் அதிகம் அன்பு பாராட்டுவார்.
மக்கள்
வங்கியில் கடமையை ஆரம்பித்த இவர்இ வேலை வாய்ப்பற்ற பல
இளைஞர் யுவதிகளுக்கு உதவுமுகமாக “வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம்” என்ற அமைப்பை 1985ஆம்
ஆண்டு ஆரம்பித்தார். இவ்வமைப்பு இலாபநோக்கற்ற ஒரு கழகமாக அமைந்தது.
அரச அலுவலகங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தொழிற்கல்வியைக் கற்பித்து பல நூற்றுக்கணக்கான அரச
சேவையாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உரித்தானது. இவ்வமைப்பானது தற்போது 35ஆவது வயதினை அடைகின்றது.
பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த இத்தெய்வத்தின் பெயர் நீடித்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
COVID
19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடே முடங்கி மக்கள்
அவதிப்பட்டிருந்தவேளை இவர் கொழும்பில் முடக்கப்பட்டிருந்தும்
தனது கிராமத்து உறவுகள் மீது கொண்டிருந்த அதீத
பற்றுக் காரணமாக என்னுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை அறிந்து கொண்டவர். இவரது இறுதிக் கிரியைகளில் நாட்டின் சூழ்நிலை காரணமாக கலந்துகொள்ள முடியாமற் போனது எங்களது துர்ப்பாக்கிய நிலையாகும்.
எங்கள்
கிராமத்து உறவுகளுடம் இவர்களது குடும்பத் தொடர்புகள் மேலும் தொடர வேண்டும் என்ற
எனது விருப்பினைத் தெரிவிப்பதுடன்இ இவரது இழப்பைத் தாங்கமுடியாதிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆறதல்களைத் தெரிவித்துஇ
இவரது ஆத்மா இறையடியில் சரணடையப் பிரார்த்திக்கின்றேன்.
திரு.வீ.கே.சண்முகநாதன்
(உறவுமுறைச்
சகோதரன்)
நிர்வாக
கிராம அலுவலர்
Comments
Post a Comment