Skip to main content

இன்முகம் காட்டிடும் சிவச்சந்திரதேவனே! - உ.லிங்கேஸ்வரி

அமரர் சிவச்சந்திரதேவனின் மறைவு எங்களின் குடும்பத்தினை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. அவரது மறைவினை எங்களால் நம்ப முடியவில்லை. அவரைப் பற்றிச் சில வரிகள் எங்களது குடும்பத்தின் சார்பாக கூற விளைகின்றேன்.

அவர் எங்களோடு பழகிய காலம் கொஞ்சமே. ஆனாலும் அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக எம்மனதில் உள்ளது. அவர் எங்களைச் சந்தித்த சந்தர்ப்பம் யாழ்ப்பாணத்திலிருந்து போக்குவரத்து இல்லாமல் கப்பலில் தான் வரவேண்டிய சந்தர்ப் பத்தில், அவரும் அவரது மனைவியும் அமரர் சிவச்சந்திரதேவனின் இருதயநோய்க்கு கொழும்பிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர். மீண்டும் சிகிச்சை பெறவேண்டி யிருந்ததால் அவர்கள் எங்களுடன் திருகோணமலையில் தங்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. அவர் எங்களோடு இருந்த காலத்தில் ஒரு சகோதரனைப்போல பழகினார். எப்போதும் சிரித்தமுகத்துட னேயே காணப்படுவார். அவர் தன்னுடைய நோயைக்கூட எங்க ளுக்கு வெளிக்காட்டியது இல்லை. எங்களோடு சேர்ந்து அவரும் அவரது மனைவியும் கோயில் திருவிழா, வெசாக் பண்டிகை என்றெல்லாம் போய் வருவோம். எனது பிள்ளைகள் மூவரையும் தங்களது பிள்ளைகள் போல பார்த்துக்கொள்வார். எனது பிள்ளை களைப் பார்க்கும் போது தனது பிள்ளையைப் பார்ப்பதுபோல் உள்ளது என்று கூறுவார். அதன்பின் நாங்கள் அவரைச் சந்தித்தது இல்லை.

அதன்பின் பல வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. எனது மகளை சென்ற வருடம் சந்தித்தபோது நாங்கள் செய்த உதவிகளையும் எங்களோடு இருந்த காலத்தில் நடந்தவைகளையும் நன்றி உணர்வோடு கூறியுள்ளார். அவரது நல்ல பண்பையும் நன்றி உணர் வையும் அன்புடன் பழகும் சுபாவத்தையும் எனது மகள் அடிக்கடி கூறுவாள். அப்படியான அன்பு உள்ளம் கொண்டவரை நான் சந்திக்கவே இல்லை. ஆனால் அவரது இறுதிச்சடங்கில் அவரை இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அது எனக்குக் கிடைத்த பாக்கியம் என்று நினைக்கின்றேன். அவரது மனதில் எங்களது நினைவு என்றுமே இருந்தபடியால் அவர் என்னையும் தனது இறுதிச் சடங்கில் பங்குகொள்ள அழைத்துள்ளார் போலும்.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, விடைபெறுகின்றேன்.

திருமதி .லிங்கேஸ்வரி
ஆசிரியர்,
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் வித்தியாலயம்,
திருகோணமலை.


Comments