கடவுள்
எழுதிய படியே
அவர்
வந்து விட்டார்
வாழ்க்கையில்
தோல்விகளைக்
கண்டாலும்
தோல்விக்கு
நிகர் வெற்றிகளைக்
குவித்தவர்
அவர்
வந்து விட்டார்
பாசமாயிருந்தாலும்
விழாமலிருக்கக்
கண்டித்தார்
அன்பாயிருந்தாலும்
பிழை விட்டால்
கண்டித்தார்
அவர்
வந்து விட்டார்
அறுபத்தொன்பது
வருட பூலோக வாசம் முடித்து
இறைவன்
காலடியில்
அவர்
வந்து விட்டார்
ஆம்
அவர் போய் விட்டார்
எங்களை
கவலையில் ஆழ்த்திவிட்டு
ஜெயதரன்
ஆதவன்
Comments
Post a Comment