Skip to main content

தம்பியின் சிந்தனையில் அண்ணன் சிவா! - திரு.வி.விபுலானந்தம்

2017ஆம் ஆண்டு நானும் பாலசிங்கம் குடும்பத்தில் ஓர் அங்கத்துவ உரிமையைப் பெற்றுக் கொண்டேன். அந்த வேளையில் அண்ணனைக் காண்பதற்கோ, பழகுவதற்கோ எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருப்பினும் அண்ணனின் பிள்ளைகள் எல்லோ ருடனும் பழகும் வாய்ப்பினை எனக்கு கடவுள் தந்திருந்தார். பிள்ளைகளின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள், பண்பாடு என்பவை அண்ணன் எவ்வாறு இருப்பார் என்பதை என்னால் கற்பனைமூலம் உணர வைத்தது. எனது மனைவிகூட அண்ணனின் பெருமைகளை எனக்குச் சொல்வதுண்டு. அனைத்து விஷேட நாட்களிலும் தொலைபேசி ஊடாக எனக்கு வாழ்த்துகள் கூறி ஓரிரண்டு வார்த்தைகள் அளவளாவுவார். “இரண்டு பேரும் இனி ஒன்றாக ஒரே இடத்தில் இருக்கவேண்டும்என மிகவும் அன்புகலந்த கட்டளையாகக் கூறுவார். நானும் ஒரு சிரிப்புடன்,வருவன்என்று கூறுவேன். சீக்கிரமாக அந்த நாட்களை எண்ணியிருந்தபோது அண்ணனின் செய்தி பேரதிர்ச்சியைத் தந்தது. அண்ணனின் சேவைகள், மனிதநேயப் பண்பு, சமயஇ கலாசாரப் பண்பாடுகளுடன் தானும் வாழ்ந்து தன் பிள்ளைகளையும் நெறிப்படுத்தி, கல்வி கேள்விகளில் மேலோங்கச் செய்து நன்மக்களாக்கி தனது இல்லறமாகிய நல்லறத்திற்குச் சான்றாகவிட்டு இறைவனின் பாதக்கமலங்களில் சரணடைந்தார். அவர் தனது மனைவி, பிள்ளைகளுக்கு அருவமாய் இருந்து ஆசி வழங்கி அவர்களை வழிநடத்துவார் என்பது நிஜம்

என்றும் அண்ணனின் தம்பி

திரு.வி.விபுலானந்தம்
தமிழ்நாடு,
இந்தியா.


Comments