எங்களுடைய
அம்மா லண்டனுக்கு வந்த தொடக்கத்தில் தனது
பாலண்ணரின் நல்ல மனதிற்கு அவருக்கு
மகனைப் போல் பார்க்கும் நல்ல
மூத்த மருமகன் கிடைத்துள்ளார் என்று உங்கள் சிறந்த செயல்களை போற்றிப் புகழ்ந்து மகிழ்ச்சியடைவதைக்கண்டு நாங்கள் எல்லோரும் பூரிப்படைந்திருந்தோம். சிவச்சந்திரதேவன் அண்ணா அடிக்கடி உங்களைச் சந்தித்து அண்ணா! என்று உங்களை அழைத்து பழகும் சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைக்காதபோதிலும் ஊர்இ உலகம் உங்களின்
நற்பண்புகளைக் கூறக்கேட்டு உவப்படைந்திருந்தோம். திடீரென்று எல்லோரையும் தவிக்கவிட்டு காலனிடம் சென்றதேனோ?
உங்களின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்
சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்
சாந்தி!!!
பூரணம் அழகதுரை குடும்பத்தினர்
Comments
Post a Comment