Skip to main content

கடவுள் ஒன்று கடவுள்களுடன் சங்கமித்தது - வாணி

இது உண்மையா?

ஆம்.

உண்மையாகியது.

எல்லாவற்றையும் மறந்து...

இன்பமாய் விடிந்த விடிகாலைப் பொழுது

சித்தி..! அப்பா... அப்பா...

என்ற அலறல்கள் - காதுகளில்

கேட்க மறுத்தும் கேட்க வேண்டும்

என்ற நிபந்தனை, நிர்ப்பந்தம்.

அது தான்...

நான் ஐயாவை இழந்த போது

உணர்ந்த வேதனை, கவலை,

தவிப்பு, ஏக்கம், தனிமை எல்லாமே

பல மடங்காக இருந்ததாக என் உணர்வு,

உணர்த்தியது, உணர்ந்தது.

அதுதான் அத்தானை இழந்த நாள்.

அவர் அத்தான் இல்லை,

நான் கண்ட கடவுள்.

அது எனக்கு மட்டுமல்ல,

எனது உடன் பிறப்புக்கள்

அனைவருக்கும் பொருந்தும்

எங்களுக்கு வாழ வழிகாட்டி

வாழ்க்கைக்கு அர்த்தம் புகட்டி

வாழ்க்கைப் படிக்கட்டை இன்னும் இன்னும்

உயரக் கட்ட உறுதுணையாக இருந்தார்,

இருக்கிறார், இருப்பார்.

அன்றில் இருந்து இன்றுவரை

அன்போடு இருந்தார், இனியும் இருப்பார்.

அது தான் உண்மை.

அவர் எங்களுக்கு மட்டுமல்ல,

அகிலத்தில் எத்தனையோ பேருக்கு

வாழ வழி காட்டி - அவர்களின்

வாழ்க்கையில் ஒளிதீபம் ஏற்றினார்.

இது மட்டுமா...

தனது கடமைகளில்

எதனையும் மறந்தும் கூட

தவறவிட்டதை நான் அறியேன்.

இது தான் மனிதநேயப் பண்பாளனாய்,

இலட்சிய புருஷனுமாய் என் - கண்முன்

நின்ற உத்தமமான மாமனிதர்,

இந்த மாமனிதர் பூவுலகத்துக்

கடவுளுள் ஒன்று - அவர்தான்

சிவத்துக்குள் ஒரு சந்திரனும் தேவனும்

இன்று விண்ணுலகத்து சிவனுடன்

சந்திரனாயும் தேவராயும்

சங்கமமாய்……


என்றும் அன்புடன்
வாணி

Comments