Skip to main content

என்றும் மறக்க முடியாத சிவச்சந்திரன் தம்பி! - அ. தளையசிங்கம்

எனது தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரரின் மகளைக் கரம்பிடித்து, எமது ஊரில் கால்பதித்த நாள் முதலாக தனது மனைவிக்கும் மனைவியின் சுற்றத்தாருக்கும் எந்தக் குறைகள் வந்தாலும் கண்ணும் கருத்துமாக செயலாற்றியுள்ளார். அவரை நான் நேருக்கு நேர் கண்டது சில தடவைகள். ஆனாலும் அவரின் சாந்தமான முகத்தையும் நற்பண்புகளையும் இன்முகத்துடன் தன்னலம் பாராது மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவருக்கு இருந்த அக்கறையும் மிகவும் போற்றுதலுக்குரியது.

ஒரு தகப்பனாக தன் பிள்ளைகளைக் கண்டிப்புடனும் மிகப் பொறுப்புடனும் பேணி வளர்த்தார். சில சமயத்தில் பிள்ளைகளுடன் ஒரு நண்பனைப்போல் புழங்கி, அவர்களின் குறைகளைத் தீர்த்து வழிநடத்தினார் என்பதை அவரின் பிள்ளைகளின் வாயால் கேட்கும் போது அவரின் மேலுள்ள நன்மதிப்பு இன்னும் மிகையாகின்றது.

அவர் தனது குடும்பப் பொறுப்புக்கள் மற்றும் உத்தியோகப் பொறுப்புக்களோடும் பிறந்த மண்ணுக்கும் செய்ய வேண்டிய கடமை யில் பின்நிற்காது, வடமராட்சியிலே படித்து பல்கலைக்கழகம் செல்லாமலிருந்த மாணவர்களுக்காக தமிழ், ஆங்கில சுருக்கெழுத்து - தட்டெழுத்துத் துறையில் கல்வி கற்பதற்கு ஒரு கல்வி நிலையத்தை ஸ்தாபித்து, அதை முறையாக நடாத்திவந்தார். இந்தக் கல்வி நிலை யத்தில் கற்ற பலர் இப்போது நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிகவும் மனநிறைவாக உள்ளது. அவரின் மறைவுச் செய்தியைக் கேட்டு தங்கள் அனுதாபங்களை இணையத்தின் மூலமாகப் பதிந்தார்கள். இப்படிப்பட்ட பெருமகன் இன்னமும் சிலகாலம் இருந்தால் எவ்வளவு நன்மைகளை ஆற்றி யிருப்பார்.

நாம் எத்தனை ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல, என்ன செய்தோம் என்பதே முக்கியம். சிவச்சந்திரனும் எவ்வித சுயநலமும் கருதாது தன் கடமைகளை எல்லோரும் பாராட்டும் விதமாக நிறைவேற்றினார். ஆனாலும் சடுதியாக உற்றார், உறவினர்க ளையும் மனைவி பிள்ளைகளையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்.

மரணம் தவிர்க்க இயலாததுதான். எல்லாம் எப்பவோ முடிந்த காரியம். அவர் இப்பூவுலக வாழ்க்கையை பூர்த்தி செய்து சிவயோகம் சேர்ந்துவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப் போமாக

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.”

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

. தளையசிங்கம்
கொழும்பு

Comments