Skip to main content

மீண்டும் ஒருமுறை உங்கள் கரம்பற்ற ஏங்குகிறேன்... - ஸைந்தவி

18 வருடங்களாக என்னுடன் இருந்தவர், இனி இல்லை. அதெப்படி முதல் நாள் வரை என்னுடன் இருந்தவர் திடீர் என்று இல்லாமல் போவார்? இனி அவர் என் வாழ்வில் இல்லை என்பதனை அறிவேன். ஆனாலும் அதை ஏற்க நெஞ்சம் மறுக்கிறது. வெறுமனே அப்பா எனக்கு கண்டிப்பான தந்தை மட்டுமல்ல. என் ஆசை நண்பனும் கூட. எனக்கு அம்மாவைவிட அப்பாவை தான் மிகவும் பிடிக்கும். காரணம் அவர் தான் என் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்யமாட்டார்.

நான் அப்பாவுடன் கதைப்பது அதிகம். அவரிடத்தே எனக்கு தயக்கம், பயம் என்பன இருந்தாலுமே கூட அப்பாவிடம் எதையும் மறைக்க வேண்டும் என மனம் எண்ணியதில்லை. காலை பாட சாலை செல்வது முதல் வீடு வந்து சேர்வது வரை நடந்த அனைத்து விடயங்களையும் அப்பாவிடம் சொல்லாமல் நான் நித்திரைக்குச் சென்றதாக எனக்கு ஞாபகம் இல்லை. நான் பிரத்தியேக வகுப்பு களுக்கு செல்லும் வேளைகளில், வகுப்பு முடியும் நேரத்தில் அப்பாவின் அழைப்பு வராமல் இருந்ததில்லை. “ஊடயளள முடிஞ்சுதோ? எத்தனை மணிக்கு வருவ? இருட்டக்கு முன்னம் வந்துடுஎன நிமிஷத்திற்கு ஒரு தடவை அழைத்துக்கொண்டே இருப்பார். ஆரம்பத்தில் அப்படியான அழைப்புக்கள் வெறுப்பாக இருந்தாலும் கூட போகப் போக அப்பா எனக்கு அவ்வாறு அழைப்பது குறைந்து விட்டது. அக்கறை கலந்த அந்த அழைப்புக்கள் என்னை விட்டு விலகிச் செல்வதை நான் விரும்பவில்லை. “என்ன சிவா இப்ப எல்லாம் என்னில பாசமே இல்லாமல் போச்சு என்ன? ஏன் எனக்கு உயடட பண்ணி எங்க நிக்கிறன், எப்ப வருவன் எண்டு கேக்கல?” என்று அவருடன் சண்டை போட்ட நாட்கள் அதிகம். அவருடன் வம்புக்குச் சண்டை போட எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

எங்கள் வீட்டில் அப்பா தான் தேநீர் தயாரிப்பது வழக்கம். என் நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் கட்டாயம் அவர் தயாரிக்கும் தேநீரை குடித்தே ஆக வேண்டும். அப்பா என் நண்பர்களோடும் நல்ல தோழனைப் போலவே பழகுவார். எனக்கு எப்படி ஆலோ சனை வழங்குவாரோ அது போலவே என் நண்பர்களுக்கும்.

அவரின் மறைவுக்கு முதல் நாள் நான் மிகவும் தாமதமாகவே எழும்பினேன். எழும்பி வந்து பார்க்கும் போது அப்பா வீட்டில் இல்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் வீடு வந்து விட்டார். அவருக்கு களை, அலுப்பு ஒன்றும் இருக்காது போல, வீட்டுக்கு வந்தவுடனேயேஸைந்தீ, நான் சுஹனுக்குத் தேத்தண்ணி ஆத்தப்போறன் உனக்கு கோப்பி ஆத்தட்டோ?” என்று கேட்டார். இந்த கேள்வியை நான் தான் அப்பாவிடம் கேட்டு இருக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்யத் தவறி விட்டேன். “இல்ல அப்பா எனக்கு ஒண்டும் வேண்டாம். அண்ணாக்கு ஆத்திக் குடுங்கோஎன்று சொல்லிக் கொஞ்ச நேரத்தில் தேநீர் கோப்பையுடன் அருகில் வந்து நின்றார்,பரவாயில்ல நான் ஆத்தி போட்டன். இண்டைக்கு ஒரு நாள் குடி, நான் இனி தேத்தண்ணி ஆத்தி தர மாட்டன்என்றார். அதன் அர்த்தம் மறுநாள் தான் விளங்கியது எனக்கு.

நாங்கள் கடந்த வருடம் சொய்சாபுரவில் இருந்து வெள்ளவதைக்கு வந்த பிறகு அப்பாவுக்கும் எனக்குமான நெருக்கம் இன்னும் அதிக மாகியது. அப்பாவுடன் சேர்ந்து தமிழ்ச் சங்கத்திற்குச் செல்வதும், கடைக்கு போவதும், மொட்டைமாடியில் இருந்து கதைகள் பல பேசுவதுமாக நாட்கள் ஓடின. இப்படி ஒரு நாள் நானும் அப்பாவும் மொட்டைமாடியில் இருந்து கதைத்துக் கொண்டு இருக்கும் போது அப்பா சொன்னார்,இனி நிறைய காலம் இருப்பனோ தெரியேலஎன்றார். “ஏன் அப்படி சொல்லுறியள்என்று நான் கேட்கவும்இ அவர் சொன்னார்,இல்ல கீழ் வீட்டு னழஉவழச ஓட கதைச்சனான், இப்ப கொஞ்ச நாளா எனக்கு வயிறு சரி இல்லையெல்லோ அத பற்றி அவரட்ட கேட்ட நேரம் அவர் சொன்னார் இத இப்படியே விடாதீங்கோ உயnஉநச ஆக்கிப் போடும் எண்டு. உயnஉநச வந்தால் நிறைய காலம் இருக்கமாட்டன் தானே?” இதை கேட்ட நான,விசரா அப்பா உங்களுக்கு? ஏன் இப்டி எல்லாம் கதைக்கிறியள்? நீங்க என்ர பேரப்பிள்ளையள் கல்யாணம் முடிச்சு போற வர இருப்பியள், இனி இந்த விசர் கத எல்லாம் கதைக்காதேங்கோஎன்று சொல்லி விட்டு கீழே இறங்கி வந்துவிட்டேன்.

கொரோனா பிரச்சினை காரணமாக 3 மாத கால ஊரடங்கு நிலவியதனால் நாங்கள் எல்லோரும் வீட்டிலேயே இருந்தோம். அந்த 3 மாதங்களில் நாங்கள் அப்பாவிடம் கதைத்த விடயங்கள் பல. அவரின் மறைவுக்கு ஒரு கிழமை முன்னர் அவரின் பழைய புகைப்படங்களை என்னிடம் காட்டி அவற்றை மீட்டிப் பார்த்துக் கொண்டார். அதில் ஒரு படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் அப்பா பார்ப்பதற்கு சஜி அண்ணா மாதிரியே இருந்தார். அதனால் நான் அதை என் தொலைபேசியில் படம் எடுத்து வைத்துக் கொண்டேன். பின்னர் அப்பாவிடம் விளையாட்டாகக் கேட்டேன். “அப்பா சின்ன வயசுல இவ்ளோ வடிவா இருந்திருக்கிங்க ஏன் போயும் போயும் அம்மாவ கல்யாணம் பண்ணிங்க?” அதற்கு அவர் சொன்னார்,இவள மாதிரி ஒருத்தி வேற ஆருக்குத் தான் கிடைக்கும் எல்லாத்தையும் பொறுத்து போறவள், ஏன் இவளுக்கு என்ன குற? நான் அவளக் கட்டினதாலதான் நீ இவ்வளவு வடிவா பிறந்தநீஎன்று சொல்லிச் சிரித்தார்.

அப்பா, அம்மா வேலைக்குப் போகும் போதெல்லாம் அம்மா வுக்கு சமைக்க உதவி செய்வார். சாப்பாடு கட்டிக் கொடுப்பார். சிலசமயங்களில் அம்மா சாப்பாட்டை மறந்து சென்றால் அதை அம்மாவின் வேலை ஸ்தலத்துக்கு கொண்டு சென்று கொடுக்கவும் தவறியதில்லை. அடிக்கடி அம்மாக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டே இருப்பார். அவரால் அம்மாவை பிரிந்து ஒரு நொடிகூட இருக்க இயலாது. சில நேரங்களில் அம்மாவையும் அப்பாவையும் பார்க்கையில் பொறாமையாக இருக்கும். எப்படி இத்தனை வருடங்களாக சந்தோஷமாக இருக்கிறார்கள்? அவர்களை போல இருப்பது கடினம். இத்தனை வருடங்களாகியும் அவர்க ளிடத்தே அந்தக் காதல் மட்டும் மறையவே இல்லை.

அப்பா எங்களை ஒரு நாளும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்ததே இல்லை. என்ன பிரச்சனை வந்தாலும் கஷ்டம் வந்தாலும், அதனால் நாங்கள் கஷ்டப்படக்கூடாது, கவலைப்படக் கூடாது என்று தான் நினைப்பார். நாங்கள் நால்வரும் என்ன செய்தாலும் அதற்கு பக்கபலமாக இருப்பார். யாருக்காகவும் எதற்காகவும் அவர் எங்களை விட்டுக் கொடுத்ததே இல்லை. எங்களுக்கு அவர் எந்த ஒரு கட்டுப்பாடும் விதித்ததில்லை. சுதந்திர மான ஒரு வாழ்க்கையை தான் அப்பா எங்களுக்கு காட்டியிருக்கிறார். அப்பாவுக்கு எங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை. “என் பிள்ளைகள் ஒரு நாளும் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்என்று. நாங்களும் அப்பா எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை உடைத்தெறிய எண்ணியதும் இல்லை. அவரின் நம்பிக்கையே எங்களைத் தவறுகள் செய்ய மனம் அனுமதிக்காத வண்ணம் வைத்துக் கொண்டது. சரியோ, பிழையோ அப்பாவின் முடிவு தான் எங்கள் முடிவும். ஆனால் அப்பா எங்கள் விருப்பத்துக்கு மாறாக ஒன்றும் செய்த தில்லை.

நான் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று செல்லும் போதெல்லாம் அப்பாவை கூட வரும்படி கேட்பேன். ஆனால் அவர்அம்மாவ கூட்டிட்டு போஎன்று சொல்லிவிடுவார். அவர் நான் மேடையில் ஏறுவதை பார்த்தாலே அழுதுவிடுவார். ஆனால் சஜி அண்ணாவின் விவாதங்கள் பார்ப்பதற்கு மட்டும் முதல் ஆளாகப் போய் நிற்பார். எங்களின் ஒவ்வொரு செயலையும் அவர் அப்படி ரசிப்பார். அது மட்டும் அல்ல அதை அவர் நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரிடமும் சொல்லி பெருமையும் கொள் வார். நான் அப்பாவுக்கு தான் அதிகம் பயப்படுவேன். சுஹன் அண்ணா எழுதும் கதைக்களை வாசிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவார். அப்பாவுக்கு சுஹன் அண்ணா எழுதும் கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்று ஆசை. “நீ எழுதடா எழுதுஎன்று அண்ணாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அதேபோல் தம்பி செய்யும் டைடரளவசயவழைகெளை பார்த்துவிட்டு,வடிவா இருக்கு! ஆன என்ன இது எண்டு தான் எனக்கு விளங்கேல்லஎன்று சொல்லுவார். அதற்கு விளக்கம் கொடுத்தாலும்இப்பவும் எனக்கு விளங்கேல்லஎன்று தான் சொல்லுவார். ஆனால் என் பிள்ளைகள் புதிதுபுதிதாக ஏதோ செய்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொள்வார்.

நான் எப்போது சேலை கட்டிச்சென்றாலும், வீட்டுக்கு வந்தவுட னேயே அம்மாவிடம் எனக்கு கண்ணூறு சுற்றிப்போடும் படி ஒரே பிடியாக நிற்பார். நான் வீணை நிகழ்ச்சிகளுக்குச் செல்வதனால் எனக்கு ஒரு வீணை வாங்கிக் கொடுக்கவேண்டும் என அவரின் நண்பர் சதானந்தனிடம் கதைக்கவும், சதானந்தன் nஉடந அவரின் மனைவியின் வீணையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

அப்பா ஒரு தந்தையாக எனக்கு எந்த ஒரு குறையும் வைத்த தில்லை. ஆனால் நான் அவருக்கு நல்ல மகளாக இருந்தேனா எனக் கேட்டால் எனக்கு தெரியாது.

அப்பா எப்பொழுது பார்த்தாலும் கையில் ஒரு புத்தகம், காதில் நயசிhழநௌ என இருப்பார். இது புதிதாக ஊரடங்கு காலத்தில் பழக்கப்படுத்திய ஒன்று. சரியாக மாலை 4 மணிக்கு புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு காதில் நயசிhழநௌஐயும் போட்டுக்கொண்டு மொட்டை மாடிக்கு செல்வார். அப்பொழுது நான் அம்மாவிடம் சொல்லுவேன்அம்மா வர வர இவர் சரி இல்ல! இவரை கொஞ்சம் கவனிச்சுக் கொள், ஏதோ 16வயசு பொடியன் மாதிரி பண்ணிக் கொண்டிருக்கிறார்அதற்கு அவர் என்னைப் பார்த்து சிரித்து விட்டுச் செல்வார். பிறகு சாக்லேட் தொலைக்காட்சி தொடர் பார்க்கத் தான் கீழே வருவார். ஏனோ தெரியாது அவருக்கு அத்தொடர் அவ்வளவு பிடிக்கும்.

அப்பா காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். எழுந்து குளித்துவிட்டு சுவாமி படத்துக்கு முன் கொஞ்ச நேரம் இருந்து எதையோ யோசித்துக் கொண்டு இருப்பார். சில நேரங்களில் அழவும் செய்வார். ஆனால் நான் அப்பாவிடம் இதைப் பற்றி எதுவும் கேட்டது இல்லை. பிறகு மொட்டை மாடிக்குச் சென்று நடப்பார் பின்னர் வந்து எங்களை எழுப்புவார். செய்தி கேட்பார். பின்னர் திரைப்படங்கள் பார்ப்பார். அப்பா திரைப்படங்கள் விரும்பிப் பார்ப்பது குறைவு. ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் திரைப்படம் பார்த்தது அதிகமாக இருந்தது. பிறகு அவர் பார்த்த படங்களை பற்றி எங்களுடன் கதைப்பார்.

இப்படி தான் ஒரு புதன்கிழமை மௌனராகம் பார்த்து விட்டு,ஸைந்தீ, எனக்கு திரும்ப பிறந்து உன்ர அம்மாவை லவ் பண்ணி கட்டோனும் போல கிடக்குஎன்று சொல்லி வெட்கம் கலந்த சிரிப்பொன்று சிரித்தார். “ஓஹோஉங்களுக்கு இப்டி எல்லாம் ஆசை இருக்கா சிவா‚? அம்மா வேண்டாம் வேற நல்ல வடிவான ஆளாப் பாத்து கட்டுங்கோஇவா வேண்டாம் ஏன் இந்த விபரீத முடிவு உங்களுக்குஎன்று நான் சொல்லி சிரிக்க, அவர் சொன்னார்,இல்ல எனக்கு உன்ர அம்மா தான் வேணும்.” “என்னவோ பண்ணுங்கோ போங்கோ‚” என்று நான் சொல்லவும், அம்மாவும் அப்பாவும் ஆளையாள் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். அப்பாக்கு அம்மா மேல் அவ்வளவு பிரியம். அவரை போன்று ஒரு நல்ல கணவன், நல்ல தந்தை யாருக்கும் கிடைத்திருக்காது.

அப்பா எப்போதுமே நாங்கள் சாப்பிட்ட பின்னர் தான் அவர் சாப்பிடுவார். அப்பாவின் மறைவுக்கு 3, 4 நாட்களுக்கு முன்னர் நான் அப்பாவுக்கு பக்கத்தில் இருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். “அப்பா நீங்க சாப்டிங்களா?” இல்லை என்றார். “இந்தாங்கோஎன தோசையைப் பிய்த்து அப்பாவுக்கு ஊட்டி விட்டேன். அப்பாக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எனக்கு ஏதோ உலக சாதனை புரிந்தது போல அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. உடனே என் தம்பியிடம் சொன்னேன்பாத்தியா நான் தான் இண்டைக்கு அப்பாக்கு சாப்பாடு தீத்தி விட்டன்அதை என் நண்பர்களுக்கும் பெருமையாக சொல்லிக்கொண்டேன்.

என்ன தான் நான் அப்பாவிடம் நெருக்கமாக பழகினாலுமே கூட அவரை தொட்டு பேச எனக்கு தைரியம் வந்ததே இல்லை. ஒரு 5 வயது சிறுமியை போல அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு சாலையை வலம் வர வேண்டும் என்று ஆசை. ஆனாலும் அப்பா இதற்கெல்லாம் அனுமதிப்பாரா என்ற தயக்கத்தினால் சற்று அப்பாவிடம் விலகியே இருப்பேன். அவரின் மறைவுக்கு முதல் நாள் முழுவதும் எனக்கு அவரை இறுக கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போல ஒரு உணர்வு. ஆனாலும் ஏதோ. “சரி எங்க போக போறார்? பொறுமையா கட்டிப்பிடிப்பம்என மனதை சமாளித்துக் கொண்டேன். ஆனால் நான் அன்று அவரை கட்டிய ணைத்து இருக்கலாமோ என இன்று தோன்றுகிறது. அன்று முழுவதும் என்னை ஏதோ புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டே இருந்தார். நான் அவரை பார்த்துஎன்ன சிவா என்னய iபாவ அடிக்குறியா?” என்று கேட்கவும் சிரித்தார். என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அந்த சிரிப்பு! அந்த சிரிப்பு மட்டும் தான் இறுதியாக அப்பா எனக்குத் தந்தது. அந்த சிரிப்பு மட்டும் தான் என் கண் முன் நிற்கிறது. அத்துணை அழகான சிரிப்பு! எதை நினைத்து அவ்வாறு சிரித்தார்? ஏன் சிரித்தார்? தெரியவில்லை.

வெள்ளிக்கிழமை இரவு நாங்கள் எல்லோரும் அப்பாவை சுற்றி இருந்து கதைத்துக் கொண்டு இருக்கவும் அம்மா, அப்பாவிடம்,இத்தன வருஷத்துல எனக்கு நீங்கள் என்னத்த தந்தியள்?” என்று கேட்கவும், அப்பா எங்கள் நால்வரையும் காட்டிஇத விட வேற என்ன வேணும்?” என்று சொல்லி எங்கள் நால்வரையும் பார்த்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நான் நித்திரை கொள்ளவில்லை. எனக்கு அடுத்தநாள் பரீட்சை இருப்பதனால் நான் படித்துக்கொண்டு இருந்தேன். சனிக்கிழமை காலை ஒரு 2 மணி அளவில் தண்ணி குடிக்கக் குசினி அறைக்குச் சென்றபோது அம்மாவும் அப்பாவும் ஏதோ கதைத்து கொண்டு இருந்தார்கள். இருவரும் தூங்கவில்லை. அப்பா என்னை பார்த்து,நீ இன்னும் படுக்கேல்லயே?”,இல்ல அப்பா, நாளைக்கு நஒயஅ இருக்கு படிச்சுட்டு இருக்கன்.” என்று சொல்லிவிட்டு அறைக்குள் வந்து விட்டேன். இவ்வாறாக காலை 5 மணி ஆகிவிட்டது. வழக்கமாக 5 மணிக்கெல்லாம் எழும்பிவிடும் அப்பா ஏன் இன்னும் எழும்பவில்லை என யோசித்தேன். “இப்ப கொஞ்சம் முன்னம்தானே படுத்தவர். அதான் எழும்பேல போலஎன நினைத்துக் கொண்டு நான் படுக்கைக்குச் சென்று விட்டேன்.

அதன் பிறகு தம்பி வந்து என்னை எழுப்பினான். “ஸைந்தீ கொஞ்சம் எழும்புகுழப்பம் நிறைந்த அவன் முகத்தை பார்த்தவுடன் என் தூக்கம் கலைந்து எழும்பினேன். அம்மா, அப்பாவின் கையையும் நெஞ்சையும் மாறி மாறி பிடித்தபடிஅப்பா! அப்பா!” என்று கூப்பிட்டு கொண்டே இருந்தார். அந்த சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள், கீழ் வீட்டு னழஉவழசஐ அழைத்து வந்தார்கள். அவர் வந்து அப்பாவை பார்த்த பிறகு pரடளந இருக்கு என்றார், பிறகு இல்லை என்றார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நேற்று நன்றாக இருந்த அப்பா எப்படி இன்று இல்லாமல் போவார்? அப்பா சிரித்தபடி படுத்திருக்கிறார். ஆனால் உயிர் இல்லை என்கிறார்கள். அண்ணா அழுகிறான். தம்பி குழம்பி போய் நிற்கிறான். அப்பாக்கு பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன். அப்போது தான் அப்பாவின் கையை பிடிக்க எனக்கு தைரியம் வந்தது. எழுப்பிப் பார்த்தேன். அசையாமல் இருக்கிறார். அவரின் நெஞ்சில் ஒரு 2 நிமிடம் தலைசாய்த்திருந்தேன். அப்பாவின் உடல் குளிர்ந்தது, இதயதுடிப்பு கேட்கவே இல்லை. கண்ணீர் கன்னங்களை நனைக்க எழும்பி அறைக்குள் வந்தவள் தான்.

இனி நிமிஷத்துக்கு ஒரு தடவை எங்க நிக்கிற? எப்ப வருவ? என்ற கேள்விகளுடன் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வரப்போவதில்லை. அப்பாவோடு மொட்டைமாடியில் கதைகள் பல பேச வாய்ப்பும் இல்லை. காலையில் எழும்பியவுடம் அப்பா தயாரிக்கும் தேத்தண்ணியும் இல்லை. இவர் தான் என் காதலன் என்று மற்றவர்களிடம் அறிமுகம் செய்ய அப்பா இனிமேல் இல்லை.

கண்களை கண்ணீர் மறைக்கிறது... வேறு என்ன நான் சொல்ல..........

ஸைந்தவி

Comments