Skip to main content

சிவச்சந்திரதேவன் - எஸ்.தயானந்தன்

நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதிலும் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். தனக்காக வாழ்பவனைக் காட்டிலும் பிறர்க்காக வாழ்பவனே போற்றப்படுகிறான். இவ்வகையில், அமரர் ..சிவச்சந்திரதேவன் முக்கியமாக வடமராட்சிக்கும் பரவலாக யாழ். மாவட்டத்திற்கும் செய்த சேவைகள் சொல்லில் அடங்காதவை.

அவருக்கு சுகவீனம் இருந்தபோதிலும் அதனைப் பெரிதாகக் கருதாமல், மக்கள் வங்கியில் தான் வகித்த முக்கிய பதவிக்கான சகல பொறுப்புக்களையும் சிறு குறையுமில்லாமல் ஆற்றியதோடு நின்றுவிடாமல் பொதுச் சேவை செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

இங்கு படித்தும் வேலைவாய்ப்புக் கிடைக்காமல் இளைஞர் அடையும் துயரைப் பார்த்து சகிக்கமுடியாமல் வடமராட்சியிலே வதிரியில் ளுவநழெ வுலிiபெ ஊநவெசந உருவாக்கி, பலவழிமுறைகள் மூலம் மிகவும் உயர்நிலைக்குக் கொண்டுசென்றார்.

முன்னர் உடுப்பிட்டி வல்லையில் இயங்கிய நூற்றல் நெய்தல் ஆலையில் உற்பத்தி செய்த படுக்கை விரிப்பு, துவாய் போன்றவை மிக உயர்தரத்தில் இருந்ததால் வாடிக்கையாளர்களைத் தேடித் திரியவேண்டிய நிலை இருக்கவில்லை. காலி, மாத்தறை போன்ற தூர இடங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் போட்டிபோட்டு இங்கு வந்து கொள்வனவு செய்தார்கள். அதேபோல் வதிரி ளுவநழெ வுலிiபெ ஊநவெசந மூலம் சித்தியடைந்தவர்களின் திறமையைப் புரிந்துகொண்ட நீதிமன்றங்கள், மாவட்ட செயலகங்கள், வங்கிகள் போன்றவை வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி னார்கள். 29.05.2020இல் வெளியாகிய உதயன் பத்திரிகையில் அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ள 29 நீதிமன்ற உயர்பதவி வகிப்பவர் களின் வாசகங்கள்மூலம் இது தௌpவாகும்.

காலஞ் செல்லச்செல்ல கணினிக்கு முக்கியம் வழங்க வேண்டிய தால் அதிக செலவில் 10 புதிய கணினிகளைக் கொள்வனவு செய்தார். எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கவேண்டும் என்ற உன்னத நோக்குடன் என்னையும் உடுப்பிட்டி பகுதியிலிருந்து சிலரைத் தெரிந்து தரும்படி கேட்டார். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் என்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, கழகம் பொறுத்துக்கொள்ளும் என்று கூறினார்.

இவைதவிர, பலருக்கும் வங்கியில் வேலைவாய்ப்புக் கிடைக்க உதவினார். வங்கிகளில் பாலர் பாடசாலைகளுக்கு உதவ எனப் பணம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் முன்பு ஒரு முகாமையாளரேனும் உதவி செய்யவில்லை. அமரர் தான் முதன்முறையாக உடுப்பிட்டியி லுள்ள பாடசாலைகளுக்கு உதவி வழங்கினார். இப்படி அமரர் செய்தவை சொல்லிலடங்கா

அமரர் தனது வேலையிலும் பொதுச் சேவைகளிலும்தான் கருத்தாக இருந்தார் என்றில்லை. தனது மனைவியிடமும் பிள்ளை களிடமும் அதிக கரிசனையுள்ளவராக இருந்தார். தைப்பொங்கல் தினத்தன்று வல்லைவெளியில் பட்டமேற்றும் போட்டி இடம்பெறும். அங்கு பிள்ளைகளைக் கூட்டிவருவார். அத்துடன் வருடப்பிறப்பன்று பண்டகைப் பிள்ளையார் கோவில் முன்றலில் போர்த்தேங்காய் உடைக்கும் போட்டி இடம்பெறும். இங்கும் மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டிவருவார். பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோதும் போட்டியில் தாங்களும் கலந்து மகிழ்வார்கள்.

தொடர்ந்து அவரது சேவையை மக்கள் பெறமுடியாது போய் விட்டது.

அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்களுக்கும் ஏனையோருக்கும் எனதும் எனது மனைவி யினதும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எஸ்.தயானந்தன், JP
தலைவர்,
உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம்.

Comments