Skip to main content

பாசத்துக்கும், பழகுவதற்கும் இனிய பண்பாளர்! - மாலினி கமலகுமார்

நான் 14.09.2011அன்று கமலாகுமார் என்பவரைத் திருமணம் செய்து உடுப்பிட்டி மண்ணிற்கு வந்தபோது எல்லோரும் உங்களைஅத்தான்என்றே அழைத்தனர். நான் என் பாசமிகு அண்ணனை இழந்தவள். ஆனால் நான், உங்களிடம் அந்தப் பாசத்தை, அரவணைப்பைப் பெற்றேன். திருமணநாள், பிறந்தநாள், பெருநாள் என எந்தவொரு விஷேசம் வீட்டில் என்றாலும் முதல் வாழ்த்து உங்களுடையதாக இருக்கும் அத்தான்அதிலும் குறிப்பாக இந்த வருட பிறந்தநாளுக்கு எனக்கு ஆடை எடுத்துத்தந்து, பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னீர்கள் அத்தான்அந்தத் தருணங்கள்தான் நான் உங்களுடன் செலவழித்த கடைசித்தருணங்கள் என்பதை என்னால் இப்போதுகூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

23.05.2020அன்று காலையில் உங்களுடைய மூத்தமகன் சஜிஷ்ணவன் நீங்கள் இறந்த செய்தியை தொலைபேசியில் கூறியபோது எனது தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது. இனி எங்களை யார்மாலா, கமலன்என்று அழைப்பார்கள். மென்மையான சுபாவத் தினாலும், அமைதியான அணுகுமுறையினாலும், இனிமையான உரையாடலினாலும், அகங்காரமற்ற போக்கினாலும், கடின உழைப் பினாலும், சேவை மனப்பான்மையினாலும் எல்லோர் மனதிலும் இடம்பிடித்த அத்தான், உங்கள் சிரித்த முகத்தை இனி எப்போது காண்போம‚! உங்களை என்றும் மறவோம்எங்கள் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறோம்

மாலினி கமலகுமார்


Comments